Editorial / 2021 மார்ச் 03 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதிகாரத்துக்கு அப்பால் சென்றே செயற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் 40 பேர், அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான 40 எம்.பிக்கள் அடங்கிய குழுவினர், 'நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யவும்' எனப் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் எழுத்துமூலமாக முறையிட்டுள்ளனர்.
2015 ஜனவரி 8ஆம் திகதிக்கும் 2019 நவம்பர் 19ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளனர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையாளர்களான உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் (ஓய்வு) உபாலி அபேரத்ன, மேன்முறையீட்டு நீதியரசர் தயா சந்திரசிறி ஜயதிலக்க (ஓய்வு), சந்திரா பெர்ணான்டோ (ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்) ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .