2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

3 ஆண்டுகளுக்குப் பின் 14 பேர் விடுதலை

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டிருந்த 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 14 பேரும் மூன்று ஆண்டுகளுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களை குற்றமற்றவர்களாக கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், அவர்களை விடுவிக்க மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X