2026 மே 09, சனிக்கிழமை

dd

‘3 நாள் பயணக்கட்டுப்பாடு சட்டத்துக்குப் புறம்பானது’

Niroshini   / 2021 மே 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமல், மூன்று நாள்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடாகுமெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சட்டத்துக்கு புறம்பாக விதிக்கப்பட்டுள்ள இப்பயண கட்டுப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் ​செய்தால், விதிக்கப்பட்டுள்ள சகல பயணக்கட்டுபாட்டுகளையும் அரசாங்கம் மீளப்பெறவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

“1947இல் நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால் மாத்திரமே பொதுமக்களின் பயணக்கட்டுபாடுகளை கட்டுப்படுத்தலாம்” என்றார்.

எனினும், 1932ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட  இராசதானிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கு அமையவே, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தால் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .