Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
அகலவத்த தாபலிகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய தாய் ஒருவர், தனது 3 வயது குழந்தையைக் கடுமையாகத் தாக்கிய குற்றச்சாட்டில், நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அப்பெண்ணைக் கைதுசெய்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவன் குறித்த பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளதுடன், உறவினர்களின் உதவியுடன் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் அப்பெண் தொழில்புரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வருவதாக, பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த குழந்தை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட பெண் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகலவத்த பொலிஸ் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago