S.Renuka / 2025 ஜூன் 08 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொசன் தினத்தையொட்டி, நாளை திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
அத்துடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவற்றை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் திருடர்களிடமிருந்து தங்கள் மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாத்து கொள்ளுமாறும் பக்தர்களை பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.
3 minute ago
28 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
28 minute ago
55 minute ago
1 hours ago