2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

300 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிப்பு

Freelancer   / 2026 ஜனவரி 02 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இன்று சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

கடந்த 2021ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.

குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, அவற்றை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து போதைப்பொருள் தொகை பொறுப்பேற்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வனாத்தவில்லுவ பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்பட்டன.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X