2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

34 மீனவர்கள் கைது: ஸ்டாலின் கடிதம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 30 நாட்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 30 நாட்களில் மட்டும், 3 வெவ்வேறு சம்பவங்களில், 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X