Editorial / 2025 நவம்பர் 02 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்படையின் நீண்ட தூர நடவடிக்கைப் படை வத்தளை, டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (02) கொண்டு வந்தது.
கடற்படைக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், மீன்பிடிக் படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 06 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடிக் கப்பல் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பிறகு, அதைப் பரிசோதித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, சுமார் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சுமார் 350 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோய்ன் இருந்ததாகக் கூறினார். ஹெரோய்ன் மற்றும் ஐஸ் ஆகியன 16,000 பைகளில் நிரம்பியிருந்தன.
9 minute ago
25 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
35 minute ago
44 minute ago