Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் நேற்று (09) விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, 82 அலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பெற்றரிகள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 61 அலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 சார்ஜர்கள், 71 பெற்றரிகள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டன.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 2 அலைபேசிகள், போகம்பர சிறைச்சாலையில் இருந்து 4 அலைபேசிகள், மெகசின் சிறைச்சாலையில் இருந்து 11 அலைபேசிகள், பூசா சிறைச்சாலையில் இருந்து 3 அலைபேசிகள், 4 சிம் அட்டைகள், 4 பெற்றரிகள் மற்றும் சார்ஜர் என்பன சிறைச்சாலை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், மற்றும் சிம் அட்டை என்பனவற்றை பகுப்பாய்வுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago