Editorial / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க 40,000 தொன் அரிசியை இந்தியா அனுப்புகிறது என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. .
முதல்கட்டமாக 40,000 தொன் அரிசி
இலங்கையின் உணவு தட்டுப் பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் தொன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 தொன் அரிசி அனுப்பப்படுகிறது.
தென்னிந்திய துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் சரக்கு கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
இதுகுறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறியதாவது:
இலங்கைக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும். இதர நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக எந்தவொரு பொருளையும் இலங்கைக்கு கொண்டு செல்ல பல வாரங்கள் தேவைப்படும். இந்தியாவில் இருந்து சில நாட்களில் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடியும்.
முதல்கட்டமாக இந்தியாவில் இருந்து 40,000 தொன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் தொன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் உணவுத் தட்டுப்பாடு குறையும். மேலும் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago