Mayu / 2026 மே 11 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (11) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என NBRO தெரிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம்: பசறை
குருநாகல் மாவட்டம்: ரிதிகம
மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்கை கோரளை மற்றும் ரத்தோட்டை
மொனராகலை மாவட்டம்: படல்கும்புர மற்றும் வெல்லவாய
இரத்தினபுரி மாவட்டம்: கொடகவெல
இந்த எச்சரிக்கைகள் முதலாம் நிலை (Level 1) எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயங்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் NBRO அறிவுறுத்தியுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago