Freelancer / 2026 மார்ச் 09 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்ப் பதற்றம் நிலவும் வளைகுடா நாடுகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை 280 விமானங்களில், 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால் வளைகுடாவில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் வெள்ளிக்கிழமை இரவு வரை 52,360 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த விமானங்களில் 184 விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் இயக்கின. அதைத் தொடர்ந்து 85 ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ.) விமானங்களும் 11 சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. (a)
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026