2026 மே 02, சனிக்கிழமை

7 கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை கையளிப்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலை கலவர சம்பவத்தில் உயிரிழந்த 07 கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் நால்வரின் அறிக்கை ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஏனைய 07 கைதிகளின் சடலங்கள் மீதான மரண பரிசோதனையை முன்னெடுத்து, இன்றைய தினத்திற்குள் மன்றில் சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் புத்திக்க சிரீ ராகல ஐவரடங்கிய நிபுணர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .