Editorial / 2026 மார்ச் 05 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஒன்பது கப்பல்களிலும் கொண்டுவரப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
இந்த நிலக்கரியில் சாம்பலின் அளவு 102 சதவீதத்தினால் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனங்களிடம் இருந்து இதுவரை தண்டப்பணம் அறவிடப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பாக வெறும் மின்னஞ்சல மூலம் மாத்திரமே நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அந்தத் தண்டப்பணத்தை அறவிடுமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது
இதேவேளை, இவ்வாறான தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதன் மூலம் நுரைச்சோலை 'லக்விஜய' மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் துறைசர் நிபுணர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
25 minute ago
45 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
52 minute ago
2 hours ago