Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மே 20 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைத்து, அவர்களை அப்பாடசாலையின் அதிபர், கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறையில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபர் இவ்வாறு கொடூரமாக தாக்கியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றது. இதன் போது அன்றைய தினம் மாணவர்கள் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல மாணவர்கள் மீது தண்ணீர் விசிறி சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து பிரம்புகளால் மாணவர்களின் முதுகிலேயே கொடூரமாக அடித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், வீடு திரும்பிய பின்னர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் காண முடிந்தது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தபோது அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு, தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.
எனினும், சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இந்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணை தொடங்கும் என கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago