Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து, பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர், இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய பிள்ளைகள் திருமணம் செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முரணாகும் என்றும் ஆகையால், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் திருமணம் செய்துக்கொள்வதைத் தடை செய்யும் வகையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளதோடு அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்து, பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மீண்டும் தங்களுடைய மதத்தைத் தழுவுவதற்கு விரும்பினால், அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மதராஷா பாடசாலையில் மதம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவது குறித்து கற்றுக்கொடுப்பதாகக் கூறப்படுவதாகவும் அது முற்றிலும் தவறாகும் என்றும் ஆனால் அங்கு கற்றுக்கொடுக்கப்பட்டது முற்றிலும் அரபி மொழியும் முஸ்லிம் அடிப்படைவாதமும் ஆகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago