Niroshini / 2021 மே 13 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-AB மற்றும் B ரக இரத்த வகைகளைக் கொண்ட நபர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகமென, ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிற்றுறை ஆராய்ச்சி சபை எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சியின் போதே, இவ்விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஷ
இந்தியாவிலுள்ள சுமார் 10 ஆயிரம் பேரைக் கொண்டு, இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, O ரக இரத்த வகையைக் கொண்ட நபர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த O வகை இரத்த வகையைக் கொண்டோருக்குக் கொரோனா வைரஸ் தொற்றினாலும், தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதோ அல்லது வைரஸால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைகளோ, மிகக் குறைவாகவே காணப்படுமென்றும், இதனால், இவ்வகை இரத்தத்தைக் கொண்டோர், உயிர் ஆபத்தை எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இறைச்சி உள்ளிட்ட மாமிசப் பிரியர்களை விட, மரக்கறி உணவுகளை உட்கொள்வோர், இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்றனர் என்றும் மரக்கறிகளில் காணப்படும் நார்ச்சத்துக்கள், குறித்த வைரஸிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன என்றும் இதனால், கொரோனாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago