2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

Brexitக்கு நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும்

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான (Brexit) நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, நாடாளுமன்ற அனுமதி பெறப்பட வேண்டுமென, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் இங்கிலாந்தின் நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இவ்வாண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய இராச்சிய மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, பிரதமர் டேவிட் கமரோன், தனது பதவியிலிருந்து விலக, புதிய பிரதமராக தெரேசா மே பதவியேற்றார்.   

விலகுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அவர் எதிர்பார்த்திருந்த நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக, இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்புக் குறித்து, ஏமாற்றமடைந்துள்ளதாக, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .