2025 மே 21, புதன்கிழமை

CIDஇல் ஆஜராகும் பஸ்நாயக்க நிலமே

Freelancer   / 2025 மார்ச் 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கதிர்காமம் கோவிலில் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறி சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே  வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, கதிர்காமத்திற்கு வந்து இது தொடர்புடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இருப்பினும், கதிர்காம தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே, பொது நிதியை செலவழித்து கதிர்காமத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், அடுத்த வாரம் கொழும்பில் இருப்பதால், குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்து உரிய வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, அவர் 10ஆம் திகதி காலை 11 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக உள்ளார்.AN

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .