2021 மே 15, சனிக்கிழமை

O/L பரீட்சார்த்திகளுக்கு கடும் எச்சரிக்கை

S. Shivany   / 2021 மார்ச் 08 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள  பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 

எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடையவுள்ளது. எனவே, பரீட்சை நிறைவடைந்தவுடன் அமைதியான முறையில் கலைந்துச் செல்லுமாறு, பரீட்சைகள் திணைக்களம்  பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

அதாவது, பரீட்சை முடிந்தவுடன் பரீட்சை நிலையங்களிலோ அல்லது பரீட்சை நிலைய வளாகத்திலோ அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல், ஏனைய  பரீட்சார்த்திகளுக்கு  இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், பரீட்சை சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இவ்வாறு செயற்படுவோரின் பரீட்சைப் பெறுபேறுகளை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .