Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலதிக நேர கொடுப்பனவு (OT) அதிகரிக்கப்படாது. மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை ஸ்கேனர் இயந்திரம் நிச்சயம் பொருத்தப்படும். அரசியல் நோக்கத்துடனான போராட்டத்துக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.எம்.எஸ்.உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் ஊழியர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் . இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் எவரும் இவ்விடயம் குறித்து வாய் திறக்கவில்லை.ஐக்கிய தபால் சேவை சங்கத்தினர் தான் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் முன்னிலையில் உள்ளார்கள்.
தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1000 நியமனங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது .அதேபோல் 1000 நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகனம் கொள்வனவுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தபால் நிலையங்களை புனரமைக்க 600 மில்லியன் ரூபாய் திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் தான் ஒரு தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுதந்திர தொழிற்சங்கம், ஐக்கிய தபால் தொழிற்சங்கம், ஐக்கிய தபால் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அரச நிர்வாக கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு கோரியும், கைரேகை ஸ்கேனர்(பிங்கர் பிரிண்ட் ) இயந்திரத்தை பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராடுகின்றனர்.
தபால் சேவையில் 2 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்கு உரிய168 ரூபாய் மேலதிக நேர கொடுப்பனவு 234 ரூபாவாகவும், 2 ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்கு உரிய 254 ரூபாய் மேலதிக நேர கொடுப்பனவு 370 ரூபாவாகவும், 1 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்கு உரிய 222 ரூபாய் மேலதிக நேர கொடுப்பனவு 324 ரூபாவாகவும், 1ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்கு உரிய 303 ரூபாய் மேலதிக கொடுப்பனவு 439 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு போதாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .