Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லாததால், எரிபொருள் வழங்கலுக்காக QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ திங்கட்கிழமை (02) அன்று தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டிருந்த எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததாலேயே கடந்த காலங்களில் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது எரிபொருள் விநியோகத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டிற்குத் தேவையான போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அத்தகைய தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago