2026 மே 20, புதன்கிழமை

dd

SFCG மற்றும் UNDP இன் நிதியுதவியுடன், திறன் விருத்தி செயலமர்வு

Lenin Raj   / 2026 மே 20 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில்  Search for Common Ground – SFCG  அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கான நிதியுதவியினை UNDP  வழங்குகின்றது . இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பங்குதாரர் நிறுவனமான காவியா சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகம் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கான வலுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக இன்று 19. 05.2026 உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் செயலமர்வு இடம்பெறுகின்றது. "உள்ளுராட்சி மன்ற சபைகளில் திட்ட முன்மொழிவுகளை வரைபுபடுத்தல் தொடர்பில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இச்செயலமர்வின் வளவாளராக முத்துலிங்கம் பகிரதன் அவர்கள் பயிற்சிகளை வழங்குகின்றார்.  உள்ளுராட்சி மன்றங்களின் 22 பெண் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுவதுடன் திட்ட முன்மொழிவுகளை எவ்வாறு உருவாக்குவது, அதனை சமர்ப்பிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வது என்பது தொடர்பில் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.

இப்பயிற்சிகள் தொடர்பில் கருத்துதெரிவித்த பெண் பிரதிநிதிகள் இப்பயிற்சிகளை காவியா  சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகம்  முன்னெடுப்பது தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன் எதிர்காலத்தில் இப்பயிற்சிகள் தம்முடைய பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான திறன் விருத்திகளையும் வழங்குவதாக குறிப்பிட்டனர்.  காவியா  சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகத்தினால் இவ்வாறான பயிற்சிகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில்முன் முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர் நிகழ்வுகள் எதிர்வரும் நாட்களிலும் வெவ்வேறு தலைப்புகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான வலுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக அபிவிருத்திகளையும் நிலையான தீர்வுகளையும் நோக்கி பயணிப்பதற்கான முன்னெடுப்புக்கள் இதன் மூலம் உருவாக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X