R.Maheshwary / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (sms ) அல்லது மின்னஞ்சல் email ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிநுட்பத்தின் கீழ், பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீற்றர் ஊடாக அலுவலகத்திலிருந்தே மின் கட்டணத்தை தயார் செய்ய முடியுமென, மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மின்மானி வாசிப்போர் அல்லது மின்பட்டியலை விநியோகிப்பவர்கள் தொழில்வாய்ப்பை இழக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அடுத்த வருடத்திலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago