Princiya Dixci / 2016 மார்ச் 28 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற இருவரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.
வான்எலப் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 28 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், வான்எலப் பகுதியிலிருந்து கந்தளாய்க்கு உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு சென்ற போது கந்தளாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (26) இரவு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
17 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Feb 2026