2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இரண்டு பசுக்களைத் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 12 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாய் பொலிஸ் பிரிவில் இரண்டு பசு மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (11)  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனது வீட்டு வளவில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் திருட்டுப் போயுள்ளது என்று பொலிஸாரிடம் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணை செய்து சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், திருடப்பட்ட அப்பசு மாடுகளையும் மீட்டுள்ளதாகவும் கூறினர்.

இப்பசு மாடுகளை வேறு பகுதிக்கு கொண்டுசென்று, சந்தேக நபர் விற்பனை செய்யவிருந்தார் எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .