2021 மே 13, வியாழக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் ஐஸ்  போதைப்பொருளுடன் இருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (09) இரவு 8.30 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், காலி-பன்னலமுல்ல, கெகுலுகஹவத்த பகுதியைச் சேர்ந்த சித்தாதகே சமிந்த (35 வயது), சித்தாதகே சந்தன (33 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விசேட பொலிஸ் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் தொடர்பில் முன் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த மொரவெவ பொலிஸ், சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .