2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

சம்பூரைச் சேர்ந்த 95 குடும்பங்களுக்கு உலருணவு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

சம்பூரில் மீள்குடியேற்றத்துக்கு அரசாங்கத்தினால்; அங்கிகரிக்கப்பட்ட 284 குடும்பங்களை விட, 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் திருமணம் செய்து புதிய குடும்பங்களான 109 குடும்பங்களில் 95 குடும்பங்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்; உலர் உணவுகள்; வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

உலக உணவுத்திட்டம் வழங்குமாறு மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் புதிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் புதன்கிழமை (30) கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இப்புதிய குடும்பங்களில் அரசாங்கத் தொழில் இல்லாத 95 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருடன் ஆலோசித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X