2021 ஜூன் 16, புதன்கிழமை

'பின்தங்கிய பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல்சக்திவேல்

கிழக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தம்மால் முடிந்தளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரக இராணுவ சிவில் குழுவின் தலைவர் டெமற்றியஸ் ஹமண்ட் தெரிவித்தார்.

அமெரிக்கத் தூதரக இராணுவ சிவில் குழுவின் தலைவர் டெமற்றியஸ் ஹமண்ட் தலைமையிலான குழுவினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை திருகோணமலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று  வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் ஆங்கிலமொழி அறிவை விருத்தி செய்யும் வகையில்; அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆங்கிலமொழி அபிவிருத்திவள நிலையங்களை நிறுவித்தருமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த அவர், 'இந்த விடயம் தொடர்பில் தாம் கவனத்திற்கொள்வதாக உறுதியளித்தார்.

திருகோணமலை, சம்பூரில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுடன் இக்குழுவினர் சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .