2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மின்விளக்கு பொறுத்துமாறு கோரிக்கை

Editorial   / 2017 மே 27 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட கச்சக்கொடுத்தீவு சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு வழியாக மாகமாருக்குச் செல்லும் வீதியில், இரவு நேரங்களில் வீதி மின்விளக்குகள் ஒளிர்வதில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்ததாகவும் காணப்படுவதுடன், இதனூடாக பல பயணிகள் இவ்வீதியை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்கள் மிக நீண்ட  நாட்களாக இவ்வீதி இருளில் மூழ்கியுள்ளதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லையா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே வீதி மின் விளக்குகளை பொருத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .