2021 ஜூன் 16, புதன்கிழமை

ரூ.103 மில். செலவில் புதிய கட்டடம்

Thipaan   / 2016 ஜூலை 24 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ எம்.ஏ.பரீத்

சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்தியர் விடுதி மற்றும் புதிய மூன்று மாடிக்கட்டடம் என்பவற்றை 103 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளரும், மத்திய சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயீஸ், நேற்று சனிக்கிழமை (23) தெரிவித்தார்.

வைத்தியசாலை விடுதி கட்டுமானப் பணியின் வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த வேளையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீண்ட கால குறையாகவும்தேவையாகவும் இருந்த வைத்தியர் விடுதி  இதன்மூலம் நிவர்த்திக்கப்படவுள்ளதுடன், வைத்தியர்கள் தங்கியிருந்து கடமை புரியும் சூழல் இதன்மூலம் உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம், திட்ட பொறியியலாளர்கள், கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தகாரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .