2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் 19 கைதிகள் விடுதலை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து 19 கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்து வந்தவர்களில் சிலரே இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களாவர். இலங்கை சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு இவர்களின் விடுதலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரொஹான் சமந்த அழககோன் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. சிறைச்சாலை பிரதம பாதுகாவலர் ஏ.புத்திக பெரோ, நலன்புரி உத்தியோகத்தர் ரி.எம.விமலசேன ஆகியோர் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதேவேளை, கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை வளவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் பேசி, உணவருந்தி மகிழ்ந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .