2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

பொதுச்சந்தையில் அனுமதியற்ற கடைகள் அகற்றப்பட்டன

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பொதுச் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற தற்காலிக கடைகள் பொலிஸாரின் துணையுடன் பதில் நகர சபைத் தலைவர் க.செல்வராசா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டதன. பொதுச் சந்தையில் 82 கடைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டிருந்தது.

இவை வியாபாரிகளுக்கு போதுமானதாக இல்லை. அவர்கள் தமக்கு இங்கு இடங்கள் வழங்கக் கோரி பலமுறை தெரிவித்தும் நகர சபையினால் கடைகள் வழங்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் தமது பொருட்களை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர்.

இது விடயமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது. இதன் போது இக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

நேற்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, தலைமையில் நகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு சட்ட விரோத கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது. இதற்கு பொலிஸாரின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு  பொதுச் சந்தைக்கு வந்த நகரசபை பதில் தலைவர்.க.செல்வராஜா (சுப்றா) நகரசபை செயலாளர், பொது சுகாதார பசோதகர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், உள்ளுராட்சி ஆணையாளர் அலுவல அதிகாரிகள்  ஒத்துழைப்புடன் இக்கடைகளை அகற்றினர்.

சில வியாபாரிகள் தாம் கடைகளை அகற்றுவதாக கூறினர். வியாபாரிகள் இல்லாத கடைகள் நகர சபை ஊழியர்களால் உடைக்கப்பட்டதுடன் அங்கிருந்த பொருட்கள் நகரசபைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .