2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மின் இணைப்பு வழங்கப்படாமை குறித்து கோணேசபுரி மக்கள் விசனம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு கோணேசபுரி கிராமத்தில் உள்ள வீட்டுரிமையாளர்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என  அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியில் 10 கிலோ மீற்றர் தொலைவில் கோணேசபுரி கிராமம் உள்ளது.
பிரதான வீதியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் அமைந்துள்ளது. இதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அண்மித்ததாக சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத் திட்டம் உள்ளது. இங்கு 364 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகளுக்கும் அதனை அமைத்த நிறுவனங்களால் மின் இணைப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், காலம் காலமாக வாழ்ந்து வரும் கோணேசபுரி மக்களுக்கு மாத்திரம் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சுமார் 50 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .