2021 ஜூன் 23, புதன்கிழமை

அத்-தக்வா பாலர் பாடசாலைக்கு தளபாடம் வழங்கி வைப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் கரையோர சமுதாய அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடத்தப்பட்டு வரும் அத்-தக்வா பாலர் பாடசாலைக்கு கடற்றொழில் நீரியல்வள அமைச்சினது வகுப்பறை தளபாடம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அத்-தக்வா பாலர் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை பணிப்பாளர் எம்.பீ.எம்.நளீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமை வகுப்பறைக்கான தளபாடங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் நிர்வாக முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .