Kogilavani / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
	திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று படையினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
	
	இத்தகைய நடவடிக்கையின் பொருட்டு இப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்த நிலையில் இந்தப் படையினரின் சோதனை நடவடிக்கையும் நிறுத்தப்பட்டிருந்தன.
	
	இன்று கவச வாகனங்கள் சகிதம் திருகோணமலை நகரின் புற நகர் பகுதியில் உள்ள லிங்க நகர்,  பாலையூற்று,  துவரங்காடு, போன்ற பகுதிகளில் இத்திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
	
	இதேவேளை மூதூர் பிரதேசத்திலுள்ள புறநகர் பகுதியான பூநகர், பூமரச்சேனை, முகத்துவாரம் போன்ற பகுதிகளிலும் இன்று படையினர் வாகனங்கள் மீது திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
	 
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025