2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கிண்ணியாவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் புதன்கிழமை மாலை (11) கிண்ணியாவுக்கு விஜயம் மேற்;கொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம்  தெரிவித்தார்.

திருகோணாமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக்கின் அழைப்புக்கு இணங்க இவர் கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.   

இதன்போது, அங்கு பஸ் தரிப்பு நிலையம் ஒன்று அமைப்பதற்குரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  கிண்ணியா பிரதேச மக்களுக்கு நீண்டகாலமாக  நிரந்தர பஸ் தரிப்பு நிலையம் இல்லாமையை கருத்திற்கொண்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, இன மத பிரதேசவாதங்களை மறந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை துரிதமாக செய்து முடிப்பதுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சகல நடவடிக்கையும் எடுத்து தருவதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம்  மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .