2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களில் 26,000 அங்கத்தவர்களை இணைக்க திட்டம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களில் 26,000 புதிய அங்கத்தவர்களை  இணைத்துக் கொள்ள வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் தகவலை கிழக்கு மாகாண  கூட்டுறவு ஆணையாளர் எம்சி.எம்.செரீப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கூட்டுறவுச் சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை  ஒட்டி கிழக்கு மாகாண கூட்டுறவு தின விழாவினை சிறப்பாக அனுஸ்டிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக  482 கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் ஊடாகவும்இ ஏனை  ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் இப் பதிய அங்கத்தவரக்ள உள்ளீர்க்கப்பட உள்ளார்கள்.கூட்டுறவுத் தொழில் முயற்சியின் எதிர்காலம் இளைஞர்களே என்பதே இவ்வருட கூட்டுறவு என விழாவின் தொனிப்பொருளாகும்.

ஊக்கமுள்ள  இளைஞர்கள் யுவதிகள் கூட்டுறவு சங்கஙகளில் இணைந்து கொண்டு  கூட்டுறவின் உன்னத பண்புகளை  முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் தலைமைத்துவ பண்புகள் மேம்படும். 

இளைஞர் யுவதிகள் மட்டுமல்லாது  கூட்டுறவுத் துறையில் ஆர்வம் உள்ள அனைவரம் தமது பிரதேசத்தினதும் சமூக பொருளாதார விரத்தியினை  ஏற்படுத்தி தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய் முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X