2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அங்கத்துவ அட்டை விநியோகம்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் திருகோணமலை அரசசேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம் பல வரப்பிரசாதங்களை தமது உறுப்பினர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக் கொள்வதற்கு தமது அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டுமென நிதியம் அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, தமது அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ அட்டை எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து21ஆம் திகதி வரை விநியோகிக்கப்படவுள்ளதாக நிதியத்தின் தலைவர் ஜி.கயிலைநாதன் தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை சிவன் வீதியில் அமைந்துள்ள நிதியத்தின் அலுவலகத்தில் வைத்து காலை 9.00 மணியிலிருந்து மாலை 2.00 மணி வரை இவ் அங்கத்துவ அட்டை விநியோகம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .