Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உதயபுரி அருள்மிகு முத்துக்குமார சுவாமி ஆலயத்தின் புதிய மூலஸ்தானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்வரும் 21ஆம் திகதி தைப்பூசத் தினத்தன்று நண்பகல் 12.35 மணி தொடக்கம் 2.05 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் கிரியைகள் யாவும், திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு வேதாகமமாமனி பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆலயத் திருப்பணிக்கு உதவிகள் செய்ய விரும்பும் பக்த அடியார்கள், 0776243309 என்ற அலைபேசி இலக்கத்தினுடாக, ஆலய பரிபாலன சபையுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
41 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago
7 hours ago