Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நோக்கில் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபடுகின்றவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொண்டு அனுமதி வழங்குவதன் மூலம், மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மேலும் பாதுகாக்க முடியும் என்று, மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், 'எமது நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் 4ஆம் கட்டத்தை அடைந்துள்ளது. எனினும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில், மக்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதோடு அவர்களுக்கிடையேயான தொடர்பும் அதிகமாக பேணப்படுகின்றது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிகளவான வாய்புகள் உருவாக்கப்படுகின்றன' என்றார்.
'அத்துடன் ஊரடங்கு அமுலில் காணப்படுகின்ற காலப்பகுதிகளிலும் நடமாடும் வியாபாரிகள், தன்னார்வு தொண்டர்களின் மூலமாக மக்களுக்கிடையேயான தொடர்பு அதிகமாக பேணப்படுகின்றது. இது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
எனவே ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதிகளில் மக்களுக்கான அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற தனியார் ஊழியர்கள், நடமாடும் வியாபாரிகள், தன்னார்வு தொண்டர்கள் அனைவரும், சுகாதார பரிசோதனை மேற்கொண்டு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் பொதுமக்களை கெரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்றார்.
ஊரடங்கை குறைந்தபட்சம், பிரதேச செயலக மட்டத்திலாவது அமுல்படுத்தி அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மக்களுக்கான சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கான அனுமதியை வழங்கும்போது அவர்கள் நோய் தொற்று அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, பொலிஸார் அவர்களுக்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
38 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
7 hours ago
09 May 2026