2026 மார்ச் 18, புதன்கிழமை

அனுமதியின்றி முதிரை மரக் குற்றிகளை கொண்டு சென்ற இருவர் கைது

எப். முபாரக்   / 2018 நவம்பர் 17 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி, ஐந்து முதிரை மரக் குற்றிகளை லொறியொன்றில் கொண்டு சென்ற இருவரை, இன்று (17) காலை கைது செய்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24, 43 வயதுடைய இருவரே கைது செய்துள்ளனரே.

சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகள் கடத்திச் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு, ஐந்து முதிரை மரக்குற்றிகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X