Princiya Dixci / 2016 மே 12 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
சீனக்குடாப் பகுதியில் அம்புலான்ஸ் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும், இன்று வியாழக்கிழமை (12) காலை மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர், கிண்ணியா எம்.அறபாத் (வயது 38) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருந்த அம்புலான்ஸ் வண்டியுடன் கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு மோதுண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக கிண்ணியாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago