2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வேண்டுதல்

Princiya Dixci   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், வடமலை ராஜ்குமார்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பல பிரதேசங்களில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விளக்கேற்றி வேண்டுதல் நிகழ்வு, நேற்று (26) நடைபெற்றது.
 
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, கிழக்கு மாகாணத்திலுள்ள  திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை  ஆகிய  மாவட்களிலுள்ள பல இடங்களிலும் நடைபெற்றது.

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள எமது குடும்ப உறுப்பினர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைகளில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை பல வருடங்களாக இரும்புக் கம்பிகளின் பின்னால் கழித்து, வயது மூப்பை அடைந்துள்ளதோடு, நோயாளிகளாகவும் ஆகியுள்ளனர்.
 
“இவ்வாறு பல ஆண்டுகளாக பல துன்பங்களை எதிர்கொண்டுவரும் சிறைகளில் உள்ள எமது உறவுகள் மிக விரைவில் அவர்களது உறவுகளுடன் வந்து சேர வேண்டும்” என மேற்படி நிகழ்வில் ஈடுபட்டோர் கோரினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X