2025 மே 17, சனிக்கிழமை

அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிட குழு நியமனம்

Thipaan   / 2016 நவம்பர் 12 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

நாட்டில் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு  மாற்றம் தொடர்பான விடயம் மற்றும் நேற்று வெள்ளிக்கிழமை மாகாண சபையில் சமர்பிக்கப்பட்ட 'நிலைபேறான அபிவிருத்தியும் செயல் நுணுக்கமும், பற்றிய அபிவிருத்தி பேரவை நிறுவுதல்' என்ற கொள்கை தொடர்பாக மத்திய அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட சட்டவிடயம் என்பனவற்றை ஆராய கிழக்கு மாகாண சபையில் குழுவொன்று  நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை ஆராய்து மத்தியரசுக்கு பதிலளிக்கவென விஷேட சபை அமர்வுவாக நேற்றைய அமர்வு, கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் கூடியது.

மத்திய அரசாங்கத்தினால் மாகாணசபையின் ஆலோசனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டமேற்படி  'நிலைபேறான அபிவிருத்தியும் செயல் நுணுக்கமும் பற்றிய அபிவிருத்தி பேரவை நிறுவுதல்' தொடர்பான  கொள்கை சட்டமூலம்  பற்றி, கிழக்கு மாகாண ஆலோசனையைபெறல் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றவேளை அவ்விவாதத்தின் முடிவில் இந்தக் குழுவை நியமிக்க சபையில் முடிவெடுக்கப்பட்டது.

'குறித்த பேரவை நிறுவுதல் தொடர்பான சட்டம் கடந்த மாகாண சபையின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் ஆலோசனையைப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், குறித்த சட்ட மூலத்தின் ஆலோசனையை விரைவாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த விஷேட அமர்வு முன்கூட்டி கூட்டப்பட்டதாக, முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் சபையில் இதனை சமர்ப்பித்து பேசுகையில் தெரிவித்தார்.

இதற்கிணங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும், இதுபோன்ற திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை  முறையாக ஆராயப்பட்டே வழங்கவேண்டும். கடந்த ஆட்சியில் மேற் கொள்ளப்பட்ட திவிநெகும போன்ற சட்டத்திருத்தம் மூலம் பல விடயங்களை மாகாணங்கள் இழந்தமையை நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் என்றெல்லாம். கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமையினால், இவற்றையெல்லாம் ஆராய்ந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டத்துக்குச் சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 'இந்த சபையிலும் பலரும் கருத்து வெளியிட்டமையினால், அதற்கானகுழுவொன்றை நியமிக்குமாறு தவிசாளரைக் கோருகின்றேன்' என, முதலமைச்சர் குறிப்பிட்டார். இதற்கிணங்கவே இந்தக் குழு, நேற்று நியமிக்கப்பட்டது. இக்குழு, பின்னர் இச்சட்டமூலம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கையிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .