2025 மே 23, வெள்ளிக்கிழமை

அ.இ.ம.காங்கிரஸுடன் 11 பேர் இணைவு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இணைந்துள்ளனர்.

கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான கே.முனவ்வர்கான் (ஐக்கிய தேசிய கட்சி), எம்.நிஹ்மத்துள்ளா (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி), எம்.ஜி.எம்.பைரூஸ் (ஐக்கிய தேசிய கட்சி), குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்வாவா தௌபீக் (ஐக்கிய தேசிய கட்சி), குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஜெ.ஜெனா (ஐக்கிய தேசிய கட்சி), சல்மான் பாரிஸ் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்) தம்பலாகமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முகம்மது தாலிபாலி (ஐக்கிய தேசிய கட்சி), தம்பலாகமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான என்.றம்சான் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்), எம்.கலீமுள்ளா (ஐக்கிய தேசிய கட்சி), ஆர்.நஜீமுள்ளா (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி), மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.நிஸ்மி (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஆகியோரே இவ்வாறு இணைந்துகொண்டவர்களாவர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X