2025 மே 24, சனிக்கிழமை

அம்பிடிய தேரருக்கு பிணை

Freelancer   / 2025 மே 23 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அம்பாறை - பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பாக இன்று (23) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X