Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
க.பொ.த (உ.த) தொழில்நுட்பவியல் பாடத்துறையில் தமிழ்மொழி மூலம் பொறியியல் தொழில்நுட்பவியல் பாடம் கற்பிக்கும் நாட்டிலுள்ள சகல ஆசிரியர்களுக்குமான பயிற்சி செயலமர்வு, யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக விரிவுரையாளர் கலாநிதி என்.முகுந்தன் தெரிவித்தார்.
பயிற்சி அமர்வு ஆரம்பிக்கும் தினத்தன்று மு.ப.8.30 மணிக்கு முன்னர் ஆசிரியர்கள் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை தர வேண்டும். முதல் நாள் இரவு விடுதி வசதி தேவைப்படும் ஆசிரிய, ஆசிரியைகள் நாளை, கலட்டி மிலேனியம் விடுதிக்கு வருகை தந்து, விடுதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தினம் உணவுக்கான வசதிகளை தாமே செய்து கொள்ள வேண்டும். இப்பயிற்சி அமர்வில் முழுநேரமும் கலந்துகொள்ளும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விடுதி வசதி, உணவு, பங்குபற்றுகைக்குரிய அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு ஆகியன வழங்கப்படும்.
வளி சீராக்கித் தொழில்நுட்பம், ஆடலோட்ட, நேரோட்ட மோட்டார் தொழில்நுட்பம், குளிர்சாதனப் பெட்டி தொழில்நுட்பம் ஆகிய தொடர்பாக இச்செயலமர்வில் பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழ்மொழி மூலம் சகல செயற்பாடுகளும் நடைபெறும்.
இப்பாடத்துறை ஆசிரியர்கள் மாத்திரம் கலந்துகொள்ளச்செய்வது அவசியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
3 hours ago