Editorial / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில், சீதனன்வெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையைத் திறந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மூதூர் பிரதேச சபை உப தவிசாளர்சி.துரைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், சீதனன்வெளிக் கிராமத்தில் கிழக்கு மாகாண மேயர் செயலகமும் ஹமீடியா தனியார் நிறுவனமும் இணைந்து, அப்பகுதியை அண்டி இருக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முகமாக ஆடைத் தொழிற்சாலையொன்றை அமைக்கும் பணியை 2016ஆம் ஆண்டளவில்ஆரம்பித்திருந்தனர்.
பின்னர் அதன் அனைத்துப் பணிகளும் முற்றுப் பெற்று, ஆளனிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று அவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் இதனுடன்ஆரம்பிக்கப்பட்ட ஏனைய ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்ற போதிலும், இந்த ஆடைத் தொழிற்சாலை இன்றுவரை திறக்கப்படாமல் இருக்கின்றமையானது அப்பகுதி இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை மழுங்கடிப்பதாக அமையும்.
அத்துடன், ஆடைத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருந்த சிலர் பல மைல்கள் தொலைவில் தம்பலகாமத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வருகின்றனர்.
எனவே,மூதூர் பகுதியில் வாழும் இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு,சீதனன்வெளி ஆடைத் தொழிற்சாலையை உடனடியாக இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு,அப்பகுதி இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்பை பெற்றுக்கொடுக்குமாறு, மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் கேட்டுக்கொண்டார்.
23 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
1 hours ago