Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, வெள்ளை மணல் பகுதியில் முச்சக்கரவண்டியில் ஆடுகள் திருடச் சென்ற ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே செவ்வாய்கிழமை (05)உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆனந்தபுரி, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.கிறிஸ்டிராஜ் வயது (32)என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடுகள் திருடுவதற்காக திருகோணமலை பிரதேசத்தில் இருந்து முச்சக்கரவண்டியில் மூன்று பேர் அதிகாலை 3.00மணியளவில் சென்றபோது, பிரதேச மக்கள் திட்டமிட்டு மறைந்திருந்து திருடர்களைப் பிடிக்க பதுங்கியிருந்தனர்.
இதன்போது ஆடுகளை திருட வந்தவர்களில் மூவர் தப்பித்துச் சென்ற வேளையில் முச்சக்கரவண்டி சாரதியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்காண்ட பொலிஸார், தப்பிச் சென்றவர்களில் இருவரை கைது செய்துள்ளனர்.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago